சென்ற வாரம் போதிதர்மரை..மன்னிக்கவும் ஏழாம் அறிவு படம் பார்த்தேன்.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு படம் பிடித்திருந்தது. வியாபார
குப்பையும் அல்ல, மிகத்தரமான படமும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் மனம்
திறந்து பாராட்டவும் முடியாமல், அவர்களின் உழைப்பால் திட்டவும் முடியாத படம்.
படத்தை பற்றி எனக்கு தோன்றியதை எழுதலாம் என்று முடிவு செய்து என்
மனைவியிடம் அதை சொல்லியும் பார்த்துவிட்டேன். முருகதாஸ், சூர்யா, உதயநிதி
ஆகியோருக்கு தெரியாமல் எழுதும்படி அறிவுறித்தினாள். (என்ன ஒரு
நம்பிக்கை??..நம்ம தளத்தை நானே ரெண்டு தடவைக்கு மேல் படிப்பது இல்லை
என்ற உண்மையை சொல்லாமல் விட்டு விட்டேன். அப்படியே இருப்பது நல்லது
என்று நினைக்கிறேன்..."அவர் ஏதோ இலக்கியம், விமர்சனம்னு எழுதுறாருப்பா..!"
என்று கூறினால் அடுத்த தீபாவளிக்கு மோதிரம் கிடைக்கும் என்று நினைப்பு..!).
ஆகவே சூரியா, முருகதாஸ், உதயநிதி அவர்களே மேற்கொண்டு படிக்காமல்
இருப்பது நீங்கள் அடுத்தடுத்த படங்கள் எடுக்கவும், நான் என்னை காப்பாற்றி
கொள்ளவும் உதவும் .!. என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள், அந்த படம் பார்த்து
தமிழுணர்வில் புல்லரித்து போய் இருந்தால், தயவு செய்து நீங்களும் படிக்க
வேண்டாம். நட்பு கெடும்..!
முதல் இருபது நிமிடங்கள்தான் படத்தின் முக்கிய கரு. ஏனென்றால் அதில்தான்
எனக்கு நிறைய புரியவில்லை. பாரதி என்னிடத்தில், "ம்ம்.. சைனீஸ் படத்துக்கு
ஏன்பா கூட்டிட்டு வந்தே?" என்றாள். நான் சப் டைட்டில் வைத்து சமாளித்தேன்..
ஆனால் போதி தர்மர் எதை வைத்து சமாளித்து இருப்பார் என்று எனக்கு இன்னும்
புரியவில்லை.. ஒரு வேளை, ஞான திருஷ்டியில் சப் டைட்டில் தெரிந்திருக்குமோ?..
அதை பற்றி உனக்கு என்ன கவலை என்று கேட்கும்படியாக மீதி படம் இருந்தது.
போதி தர்மர் என்பவர் ஒரு பல்லவ அரசரின் மகன். காஞ்சிபுரம்தான் அவர்
பிறப்பிடம். திடீரென்று அவருக்கு ஆன்ம ஞானம் ஏற்பட்டது. மக்களுக்கு அதை
போதிக்க முயற்சித்தார்.(அவர் பெயரின் முதல் பாதி புரிகிறதா?). அவர் தமிழில்
பேசியதாலும் அது புரியும்படியாக இருந்ததாலும் நம் மக்கள் அவரை ஞானியாக
ஏற்று கொள்ள வில்லை. கொடுக்க வேண்டியதை கொடுத்து (அவர் பெயரின்
இரண்டாவது பாதிக்கும் அர்த்தம புரிந்ததா?) அனுப்பி வைத்தனர். அவர் தான்
பேசுவது முற்றிலும் புரியாத ஊருக்கு பயணப்பட்டார். தமிழில் இருந்த சமஸ்க்ரித
கலப்பால் இந்தியாவில் இருந்த அனைவருக்கும் அவர் பேசியது கொஞ்சமாவது
புரிந்துவிட்டது. ஆகவே அவர் அதையும் தாண்டி பயணப்பட்டார். சீனாவை
அடைந்தார். அங்கு அவருக்கு வேறு பிரச்சனை!
மூக்கு சிறிதாயினும், சீக்கு பெரிதாக பரவியிருந்தது சீனர்களிடம். போதி தர்மர் தன்
திறமையான வைத்திய முறைகள் மூலம் அவர்களை குணப்படுத்தினார்.அவர் தன்
பெயரை எப்படி உச்சரித்தும் சீனர்களின் வாயில் நுழையாமல் அவர்கள் அவரை
'தாமு' என்றே அழைத்தனர். (தாமு என்றால் கூடவே சார்லியும் இருக்க வேண்டும்
என்ற நியதியின் காரணமாக சார்லியை நாடு முழுவதும் தேடி, பிறகு ஜெர்மனியில்
சார்லி சாப்ப்ளினாக கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகள் கழித்து கண்டுபிடித்த கதையை
எட்டாம் அறிவில் முருகதாசே எடுப்பதாக ஒரு உபதகவலும் உண்டு. சார்லியாக
விஜய் நடிக்க கூடும் என்று நான் எச்சரிக்கிறேன்).
அதன் பிறகு தாமு மக்களுக்கு ஒரு சில கலைகளை பயிற்றுவித்தார். நிறைய
சீனர்களை அடித்து உதைத்தார். உதைத்தது போதும் என்று தோன்றியதும் அதன்
எதிர்பதத்தை நினைத்து இந்தியா திரும்ப எத்தனித்தார். சீனர்கள் அவர் உடல்
இங்கிருந்தால் எந்த நோய் கிருமியும் நெருங்காது என்ற நம்பிக்கையில் அவரை
விஷம் வைத்து கொள்கிறார்கள். நிற்க!!!
யோசிக்க ஒன்றும் இல்லை. அந்த படத்தில் இருந்தவற்றை அப்படியே
தந்திருக்கிறேன்...விடுபட்ட இடங்களை மட்டும் என் கற்பனையால் நிரப்பி!!
முதல் இருபது நிமிடங்களில் இவை அனைத்தும் முடிந்து தமிழ் படம்
ஆரம்பித்தது.மீதி கதை இதோ!!
போதி தர்மரின் பல பிறவிகளுக்கு பிறகு, ஒரு சர்க்கஸ் கலைஞனாக (இன்னொரு
சூர்யா) பிறக்கிறார். ஆனால் அவருக்கு அந்த பழைய ஜென்ம ஞாபகம் எதுவும்
இல்லை. அதே நேரத்தில் சீனா ஒரு உயிரியல் ஆயுதத்தை சென்னைக்கு ஒரு
வில்லன் மூலம் அனுப்பி வைக்கிறது. இது தெரிந்த ஸ்ருதி வில்லனை அனுப்ப
முயற்சிக்காமல் பேசியே நம்மை அரங்கத்தை விட்டு அனுப்ப பார்கிறார். நடுவில்
அவர் ஆராய்ச்சியை ஆசிரியர் அங்கீகரிக்காததால் அவரை கெட்ட வார்த்தையில்
திட்டுகிறார். மேலும் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் இரண்டு
என்பதை தன் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து நமக்கும் சொல்கிறார். ஒன்று
ஊழலாம். இன்னொன்று நான் எதிர்பாராதது..அது இட ஒதுக்கீடாம். நானும்
யோசிக்காமல் விட்டு விட்டேன் இதுவரை. இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால்
நாம் என்றோ தமிழ் படித்து, வளர்ந்து வல்லரசாகி இருப்போம். இந்த இட ஒதுக்கீடு
இருந்ததால் நம்மால் அப்படி முன்னரே முடியவில்லை. கொள்ளை பயலுக இந்த இட
ஒதுக்கீட்டால் படித்து விட்டு வந்து இந்தியாவை பின்நோக்கி தள்ளுகிறார்கள். அது
எப்படி அவர்கள் படிக்கலாம். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்கள் நல்ல
நிலையில் பிற நல்ல தொழில்களை செய்து கொண்டு இருந்திர்ப்பார்கள்.
இந்தியாவும் முன்னேறி இருக்கும். அவர்கள் படிக்க வந்ததால்தான் எல்லா
பிரச்னையும்...!! போதும் என்று நினைக்கிறேன்.மீண்டும் கதைக்கு செல்வோம்!!
சுருதி ஒரு அற்புதமான மருந்தை கண்டுபிடித்து அதை பல்வேறு குழாய்கள் வழியே
சூர்யாவுக்கு செலுத்தி, அவரை ஒரு தொட்டியில் ஊறப்போட்டு பூர்வ ஜென்ம
ஞாபகத்தை உருவாக்குகிறார். சூர்யாவுக்கு ஞாபகம் வந்து, அவருக்கு விஷம் வைத்த
சீனர்களின் பிரதி நிதியை போட்டு தாக்கி கொல்கிறார். அதே ஞாபகத்தில் இலை
தளைகள் வைத்து அந்த உயிரியல் ஆயுத கிருமியை அழிக்கிறார். கூடவே தமிழனை
மறதிக்காக திட்டுகிறார். அவ்வளவுதான்!
சுபம்!!
என்ன இரண்டாவது பாதியில் வரும் முன் ஜென்ம விசயங்களை நம்ப
முடியவில்லையா?.. ஒன்றும் பாதிப்பில்லை, தேடி மாற்று (find & replace) வசதி
மூலம் முன் ஜென்மத்தை ஜீன்கள் அல்லது பரம்பரை என்று மாற்றிக்கொண்டால்
போதும்..முழு கதையும் உங்களுக்கு தெரிந்துவிடும்.
படம் பார்த்து அறிவை ஏழாக்கி கொள்ளவும்!!
இவண்,
காளிராஜ்
//மூக்கு சிறிதாயினும், சீக்கு பெரிதாக பரவியிருந்தது சீனர்களிடம். //
ReplyDelete:) நல்ல விமர்சனம் :)
Point 1-> "போதி தர்மரின் பல பிறவிகளுக்கு பிறகு, ஒரு சர்க்கஸ் கலைஞனாக (இன்னொரு
ReplyDeleteசூர்யா) பிறக்கிறார். ஆனால் அவருக்கு அந்த பழைய ஜென்ம ஞாபகம் எதுவும்
இல்லை"... I think as you reading subtitle for Bharathi you missed some part of the movie :)Aravindan (suriya) is just plotted as same family with DNA matching to his ancestor (bhodi darma).. Point 2-> When buddha from india went to china and spread buddisum why no bodhidharma.. Point 3-> Bodhidharma name in chinese is not just dama it is 'po ti da mo'.. Point 4-> As a movie director missed to add cinematic to make people believe but I have read few blogs about 'po ti da mo' (http://damo-qigong.net/qigong/damo.htm) Point 5-> As a review your blog has full of humor sense, I like it
Gopu!!
ReplyDelete1. Is it? So adhaam/Eve qualities-iyum namma ippo derive pannalaamaa??.. If jesus created both from his bone, then you mean we can create jesus quality too in us? :).
2. Budha eppo china ponaaru?.. Idhu ettaam arivaa??.. Ashoka, Hyang-chuan(don't check spelling..i don't know) etc..these guys only spread budhism in china/srilanka etc.. i believe.
3. ok. Po ti da mo (kullmaa irundhdhaala 'podi' da mo..correctaa??
4. good. I appreciate it. Epporul yaar yaar....
5. Purinchiduchaa?? appuram yen mela irukira naalu points?? :)
1. 6 thalaimuraiyae araichiyila thaan irukku, neenga mudhal talaimurai pathi kaekuringa :)(Athu konjam cinema thanam.. ithukku neenga innoru comment pannirukalam-> villan direct'a PM'kitta pooi hypnotism panni "medicine sales"/"amount steal" pannitu orukku poirukalam. when we filling vessel it is difficult to take something from bottom)
ReplyDelete2. athu immigration department'a kaetathaan teriyum.. but chinese oru language thaanae..yenga roomla oruthan 7 language paesuran (english, tamil, hindi, urudu, malayalam, telugu, chinese)
3. bho dhi dhar ma become 'po ti da mo'.. it what i read i'm not sure about his physic
5. Humour sense I mean is enjoyable -> It is kind of talent ji.. some people give honey with medicine and urs is honey with cake (may be not good for sugar patient) :)
:).. Nee nalla comment panra gopu!!
ReplyDelete5. Hope you are not sugar patient! :)