ஜெயமோகனின் "நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்" புத்தகத்தில் இருந்தே இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன்.
புத்தகத்தில் முகவுரையில் ஒரு அனுபவத்தை பற்றி சொல்லி இருப்பார். ஏதோ ஒரு கல்லூரியில் உரையாற்ற போய் இருக்கும்போது, ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது! "ஏன் இப்படி புரியாத மாதிரி எழுதனும்? உங்களை மேதாவி என்று காட்டி கொள்வதுதானே உங்கள் லட்சியம்?" என்ற தொனியில். இந்த கேள்வியை படித்தபோது எனக்கும் "அதானே!" என்றுதான் தோன்றியது. மேற்கொண்டு படிக்க, படிக்க ஜெயமோகன் அந்த எண்ணங்களை தவிடு பொடியாக்கி இருப்பார்.
அவர் இந்த விசயத்தில் சொல்வது இதைத்தான். "எந்த ஒரு ஆறாம் வகுப்பு மாணவனும், ஒன்பதாம் வகுப்பு கணக்கு பாடத்தை படித்து விட்டு, ஏன் இப்படி புரியாத மாதிரி இருக்கிறது என்று சொல்வதில்லை. அவர்கள் ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தை நிராகரிப்பதும் இல்லை. இலக்கியத்திலும் அதே போன்ற படி நிலைகள் உள்ளன". நேரடியாக, நவீன/கொஞ்சம் சிரமமான இலக்கியத்தை படித்து விட்டு இந்த மாதிரி சொல்வதை அவர் ஏற்கவில்லை. மேலும் இலக்கியம் படிப்பதற்க்கு கொஞ்சம் உழைப்பு தேவை. அதை செலவழிக்காமல் இருந்தால் இலக்கிய வாசிப்பு சாத்தியமே இல்லை என்பது அவரின் தீர்க்கமான வாதம்.
அந்த புத்தகம் முழுவதும் இது போன்ற ஏராளமான கருத்துக்களும், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கான அவரது சிபாரிசுகளும் நிறைந்திருக்கும். கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம், நீங்களும் இந்த தேடலில் இருந்தால்...!
ராமகிருஷ்ணன் மற்றும் சுஜாதாவின் படைப்புக்களை பற்றி சொல்வதற்கு முன், என்னை பற்றி (அதை தெரிஞ்சி நாங்க என்ன பண்ண போறோம்?)... வாசிப்பில் என்னுடைய தராதரம் பற்றி, முக்கியமாக!.
சிறு வயதில், நான் படித்தவைகள் ராமகிருஷ்ண விஜயம் (உபயம்: தமக்கையின் பள்ளி), சிறுவர் மலர் (தினமலரின் வெள்ளி இணைப்பு), அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம், அதன் பிறகு நிறைய காமிக்ஸ் புத்த கங்கள் (இரும்புக்கை மாயாவியின் கும், கும் குத்துக்கள் சிறு வயதில் முகத்தில் விழுவது போன்ற கற்பனையுடன் படிக்க முடிந்தது..)
அதன் பிறகு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு (என் மனைவி இன்னும் எனக்கு விவரம் போதாது என்றே சொல்லி கொண்டு இருக்கிறாள்) நான் படிக்க ஆரம்பித்தது கிரைம் நாவல்கள். அதன் பிறகு ஒரு மூன்று வருடங்கள் எனக்கு ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் படிக்காத பயணமே இருந்தது இல்லை. அவைகள்தான் என்னை பொறுத்தவரை நாவல்கள், அந்த வயதில். சொல்லப்போனால் சிறிது காலம் முன்வரை எனக்கு நாவல்கள் என்று நினைத்தாலே அந்த வகை கிரைம் நாவல்கள்தான் நினைவிற்கு வரும்.
இந்த கிரைம் நாவல்கள் படிக்கும் பழக்கம் திடீரென்றே என்னை விட்டு நீங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் மட்டுமே வாசித்திருப்பேன். அதற்கு பிறகு போன மாதம் வரை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களில் ஒரு நாவல் கூட நான் வாசித்தது இல்லை (அடப்பாவி! நீயெல்லாம் எழுத வந்திட்டியா!).
அதன் பிறகு என்னை முழுவதும் ஆக்ரமித்திருந்தது 'ஆனந்த விகடன்' மட்டும்தான். எனக்கு தெரிந்து வெகு சில இதழ்களை தவிர எல்லாவற்றையும் படித்திருப்பேன், தொடர்ந்து.
இவ்வளவுதான் என் வாசிப்பை பற்றி! (ஒண்ணுமே படிக்கலை அப்படிங்கிறத ரெண்டு பாராவிற்கு எழுதி இருக்கிறேனோ??).
--- தொடரும்...

//இவ்வளவுதான் என் வாசிப்பை பற்றி! (ஒண்ணுமே படிக்கலை அப்படிங்கிறத ரெண்டு பாராவிற்கு எழுதி இருக்கிறேனோ??).
ReplyDelete//
பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)